காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பு இன்று (20) இரவு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (19ம் திகதி) இரவு வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்ட முடியாததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா பகுதியில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முன்மொழிவு செய்யப்பட்டது, ஆனால் அமெரிக்கா அந்த திட்டத்தை தடை செய்திருந்தது.