கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் எம் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டல் மற்றும் பணிப்புரையின் கீழ் உள்ளூர் சுற்றுலாத்துறையை விருத்தி செய்து குடிசை கைத்தொழிலாளர்களின் ஜீவனோபாயத்தை விருத்தி செய்யும் உயரிய நோக்குடன் எதிர்வரும் 2024 ஜனவரி முதல் வாரத்தில் இலங்கையின் மிக நீளமான கிண்ணியா பாலம் மற்றும் சிறுவர் பூங்காவை அண்டிய பகுதியில் மாபெரும் கிராமிய படகோட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பொதுமக்கள் விளையாட்டுக் கழகங்கள் சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது இந்நிகழ்வில் பங்கு பெற விரும்பும் வீரர்கள் தங்களின் பெயர் கையடக்க தொலைபேசி இலக்கம் என்பனவற்றை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் (ஒரு குழுவில் மூன்று போட்டியாளர்கள் இணைக்கப்பட வேண்டும்)
நீங்கள் ஆளுநர் செயலகத்தில் நேரடியாகவோஅல்லது 0262222102 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அழைத்து அல்லது தொலைநகல் மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்
e-mail-fasithseu@gmail.com
மேலதிக விபரங்களுக்கு
எம் எம் பாசித்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்