(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட பணிப்புரையில் அம்பாறை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் தோரும் கட்சிக்கிளைகள் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் அங்கமாக கல்முனை 16ஆம் வட்டாரத்தின்,10ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான கட்சிக்கிளைகள் புனரமைப்புக்கான விஷேட கூட்டமும்,நிருவாகத்
தெரிவும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூரின் தலைமையில்,கல்முனை காசிம் வீதியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று(12) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர்,முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும்,ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்,கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.எம்.நிஸார்,கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்டீன்,கல்முனை பிரதேச ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.