கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என அதன் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்,
இவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவர்களை குடியமர்த்திய பின்னர் தோட்டங்களில் எஞ்சியுள்ள இடங்கள் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.