லொரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பரெய்லி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று பயணித்துள்ளது.
அப்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்த்திசையில் பயணித்த லாரி லொரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்ததால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டதால் ஒரு குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனே இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து காருக்குள் 8 பேரின் உடல்களும் கருகி கிடந்தன. பின்னர் அவரது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பஹாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.