மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி மனக்கணித போட்டியில் சாதனை...




(றிஸ்வான் சாலிஹூ)


மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி தமிழ்செல்வன் அக்சதா மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


கொழும்பில் BMICH இல் இடம்பெற்ற மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற இம்மாணவி சர்வதேச மனக்கணக்கு போட்டிக்கு தெரிவு  செய்யப்பட்டிருந்தார்.


அதன்பிறகு இவர் 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதிலே அக்சதா இச்சாதனையை படைத்துள்ளார்.


செங்கலடி பகுதியைச் சேர்ந்த இவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வருபவருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section