போதைப்பொருள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை இன்று புதன்கிழமை (27) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையினால் கடந்த மூன்று நாட்களாக இந்த நடவடிக்கையை குறைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த நடவடிக்கையின் கீழ் கடந்த 25ஆம் திகதி வரை 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.