கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும், கொடதுவ, மஹரகம, நுகேகொட பிரதேசங்களிலும், கம்பஹா, அத்தனகல்ல, பியகம ஆகிய பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் முறைசாரா கழிவுகளை அகற்றுவதும், கொசுக்கள் பெருகும் இடங்களை பராமரிப்பதும் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இலங்கையில் நாளாந்தம் சுமார் 200 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், டெங்கு நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.