18 ஆயிரம் போதை மாத்திரைகள் சிக்கின.

0


 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி , தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது .

கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.அத்துடன் போதை வில்லைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top