யாழில் ஒருவர் அடித்துக் கொலை

 


யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section