போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முயற்சித்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப சோதனைகளின் போது
குறித்த சந்தேக நபரின் கனேடிய விசா தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.
இதன் போது இவரது ஆவணங்கள் சோதிக்கப்பட்டது, அவரது ஆவணங்கள் மீது நடாத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது விசா போலியானது என்பது கண்டறியப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் தரகர் ஒருவருக்கு 3 மில்லியன் ரூபா கொடுத்து போலி விசாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.