நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு தாம் முழுமையாக உடன்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தபால் நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுவதால் அதனை பராமரிக்க முடியாது எனவும் செயல்படாத மற்றும் பயன்படுத்தப்படாத வளத்தை சிறப்பானதாக மாற்ற ஜனாதிபதியிடம் யோசனை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாஜ் சமுத்ரா ஹோட்டல் என ஆரமபித்த அமைச்சர் சுற்றுலாத்துறையில், நுவரெலியான சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாகும்.
குறிப்பாக சீதா எலியா வழியாக இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதி சிறப்பு ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
எனவே, ஹோட்டல் நிர்மாணத்தின் மூலம் அந்த மாகாண மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்படும், வேலை வாய்ப்புகள் உருவாகும்.வருமான ஆதாரங்களும் பெருகும்.
எனவே, துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தபால் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை ஹோட்ட திட்டத்திற்கு வழங்க நான் முற்றிலும் விரும்புகிறேன்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.