S.M.Z.சித்தீக்
உலக உணவு திட்டம் , அரசாங்கத்துடன் இணைந்து , அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடும்பங்களிற்கு அவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆதரவு வழங்குகின்றது. இதன் அடிப்படையில்
இறக்காமம் , நிந்தாவூர் , பொத்துவில் , சம்மாந்துறை , திருக்கோவில் போன்ற பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 24239 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இரண்டு மாதங்களுக்குக்கான உதவிப் பொருட்கள் ஒரு தடவையில் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு 20 Kg கடலை பருப்பு, 5 லீற்றர் சமையல் எண்ணெய்யும் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு தலைமை அதிகாரிகளும், இறக்காமம் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.