உலக கிண்ண தொடரின் 39ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலின் அற்புதமான இரட்டை சதத்தினால் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
மும்பையில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் 129 ஓட்டங்கள் குவித்தார்.
மிரட்டலான வெற்றி
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட்களை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது. 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என அந்த அணி தத்தளித்த நிலையில் மேக்ஸ்வெல் காப்பாளனாக மாறினார்.
மிரட்டலாக அவர் சதம் விளாசிய நிலையில் தசைபிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய அவர் 195 ஓட்டங்களில் இருந்து சிக்ஸர் அடித்தார்.
இதன்மூலம் அவர் இரட்டைசதத்தை எட்டியதுடன், அவுஸ்திரேலிய அபார வெற்றியை பெற்றது.