குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றோர்களுமே எதிர்காலத்தைப் பற்றி அச்சப்படுவர் : இளைஞர்கள் பட்டறையில் எஸ். எம் சபீஸ் உரை

Dsa
0

 




நூருல் ஹுதா உமர் 


எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வயதில் இளைஞர்கள் இல்லை. இந்த வயதில் தலைமைத்துவ பயிற்சி முகாம்களில் கலந்துகொள்வது, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் கலந்துரையாடுவது, சமூகம் சார் பணிகளில் ஈடுபடுவது, முறையாக இயற்கையை ரசித்து அதன் அற்புதங்களில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்வது, போன்ற விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் வயதாகவே இளைஞர்களின் வயது காணப்படும் இந்த வயதில் குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றோர்களுமே எதிர்காலத்தைப்பற்றி அச்சப்படுவர் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். 



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் துணைப் பொருளின் கீழ் மூன்று நாள் பயிற்சி முகாம் கல்முனை கல்வி வலய கமு/கமு/ நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம், 25ம், 26ம் திகதிகளில் நடைபெற்றது.




இந்நிகழ்வின் இறுதி நாளான இன்று (26) சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதுவும் இலவசமாக எமது வாழ்வில் கிடைத்து விடாது. அதற்கு உங்களது பொன்னான நேரங்களை செலவிட்டு இவைகளை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பிழையான பாதையில் இளைஞர்கள் பயணிப்பதிலிருந்து தவிர்ந்து சரியான பாதையில் பயணிக்க இவ்வாறான வேலைத்திட்டங்கள் நன்மையாக அமைகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த வேலைத்திட்டம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பல இளைஞர்களும் பயன்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார் 




தலைமைத்துவம் மற்றும் குழு திறன் விருத்தி தொடர்பான பயிற்சியும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நோக்கம் இலக்கு தொடர்பில் நினைவூட்டலும் களத்தில் இளைஞர் கழகங்கள் அமைப்பது தொடர்பான பயிற்சியுடன் கூடிய வேலைத்திட்டமும் மேலும் பல தலைப்புகளிலும் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்த, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்திப், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாரக் அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா, அல்- மதீனா வித்தியாலய அதிபர், நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.பரீட், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. ஷாமிலூல் இலாஹி, கல்முனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஷீம் உட்பட இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top