இஸ்ரேல் தரைவழித்தாக்குதலை தொடங்கி சுமார் 20 நாட்கள் கடந்தும் 100 சதுர கிலோமீட்டர் பரப்பை மையமிட்டுள்ள பலஸ்தீனப் போராளிகளையும் அவர்களின் சுரங்கங்களகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இஸ்ரேல் காஸா எல்லையில் 2 இலட்சம் இராணுவத்தை ஆயிரக்கணக்கான போர்த்தாங்கிகளுடன் நிறுத்தி சில உள்ளே நுழைந்து தாக்கிவரும் நிலையில் பலஸ்தீனர்களில் வெறும் 25 பேர்தான் இன்னும் இவர்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் அபூ உபைதாவின் கருத்துப்படி.
ஒக்டோபர் 7 முதல் இதுவரை 2000 ற்கும் அதிகமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிப்பாய்கள் கொல்லப்படுட்டுள்ளனர்.மறுபறம் போராளிகள் தரப்பில் பத்துபேரளவிலேயே ஷஹீதாகியுள்ளனர்.
நாளொன்றுக்கு குறைந்தது 30 போர்க்கவசங்களை போராளிகள் தாக்கி அழிக்கின்றனர்.ஒன்றின விலை 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.இதன் கணக்கைப் பாருங்கள்.
இஸ்ரேலின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது. இப்போதே ஆறு பில்லியன் கடனில் ஓடுகிறது வண்டி.
இஸ்ரேலுக்குள்ளே போராளிகள் உருவாக்கியுள்ள உளப்பயம் psychofear வேறு. இனி எமக்கு இந்நாட்டில் பாதுகாப்பில்லை என்பதே யூத ஸியோனஸ்டுகளின் இன்றைய உளவியல்.
இன்னும் ஒருமாதம் போர் நீடித்தால் ஸியோனிஸ்டுகள் இன்னும் 10 ஆயிரம் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்று தீர்ப்பார்கள் என்பது உண்மை.ஆனால் இஸ்ரேல் என்ற நாடு அதற்குப்பின் எழுந்து நிற்குமா என்பது சந்தேகம்.
இஸ்ரேல் எதிர்பாராத வகையில் பிராந்தியத்தில் இயங்கிவரும் அனைத்து ஆயுதக்குழுக்களும் இஸ்ரேலை நோக்கி தமது ஆயுதங்களை திருப்பி வருவது மிகப்பெரிய சவால்.
உலகளாவிய எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் பற்றிய விகாரமான பிம்பங்கள் வேறு.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில்தான் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அடிபணிய நேரிட்டுள்ளது. கர்வத்துடனும் ஆணவத்துடனும் நாம் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என்ற நெடன்யாஹூ இப்போது பெட்டிப் பாம்பாக ஓட்டுக்குள் ஒழியும் நத்தையாக மழுங்கி வளைகிறார். இது எதன் அடையாளம். ராணுவரீதியில் தோற்று விட்டார்கள் அவர்கள்!!