ஸெய்ன்ஸித்தீக்
"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டுமாணவர்கள் மாகாணமட்டத்தில் சாதித்து தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள்"
இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாகாண மட்ட சித்திரப் போட்டியில் பங்கேற்று முதலாம்,மூன்றாமிடங்களைப் பெற்று பாடசாலைக்கும் இறக்காமம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
அந்த வகையில் தரம் 6 தொடக்கம் 7 பிரிவில் மாகாண மட்ட சித்திரப் போட்டியில் முதலாமிடத்தை தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவி அப்துல் முனாப் பாத்திமா நுஷைபா அவர்களும்,
மூன்றாமிடத்தை முஹம்து குத்தூஸ் யூசுப் ஷயானும் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள்.
இவர்கள் இவ்வளவு தூரம் செல்வதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றிக்கடனோடு இருக்க வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும். அதேவேளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பின்னால் நிழலாக இருந்து ஊக்கத்தோடு செயற்படும் போதே இவ்வாறான அடைவுகளை தொடர்ந்தும் நிலைகொள்ளச் செய்யலாம் என்பது திண்ணம்.