S.M.Z.சித்தீக்
"உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் நாடு பூராகவும் மாணர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இறக்காமம் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான வாசிப்புப் போட்டி இன்று இறக்காமம் பிரதேச சபையின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் சாபீர் பிரதம நூலகர் எம்.எம்.முநௌபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வைத்தார்கள்.