தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது.
வருகின்ற 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதை அவர் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.
இருந்தபோதிலும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை தங்கியிருக்க விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலோசியாவின் 5 ஆவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4 ஆவது இடத்தில் உள்ளது.
மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனால் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளனர்.
முன்னதாக, தாய்லாந்து இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தங்களது நாட்டிற்று வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.