உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிளோட்ட நிகழ்வு அக்கரைப்பற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் வழிகாட்டுதலில் நலன்புரி சங்கத்தின் தலைவர் டாக்டர். ஏ.ஜி.எம்.ஷயீ தலைமையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு சைக்கிளோட்ட நிகழ்வு அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வழியாக ஒலுவில் தென்கிழக்கு பல்லைக்கழகத்தை சென்றடைந்து மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை வந்தடைந்தது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி:
சியாத் எம்.இஸ்மாயில் படம்:கே.மாதவன்