கொய்யா இலையில் கொட்டிக்கிடக்கும் மருத்துவம்!

Dsa
0

 



கொய்யா மரத்தின் இலை, கனி, பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குறிப்பாக கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.


கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனை, வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றை குணப்படுத்தும். கொய்யா இலை டீயின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.


கொய்யா இலை டீ வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.


30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.


கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top