கலாநிதி. றவூப் ஸெய்ன்
ஆசிரியத்துவம் ஒரு மகத்தான பணி என்பதில் உலகம் உடன்படுகிறது. இருக்கும் எல்லா தொழில்வாண்மைகளிலும் ஆசிரியமே மிக உன்னதமானது. காரணம் மனிதனை, மனித வளங்களை, மனிதத்லைவர்களை, மனித ஆளுமைகளை பரிபூரணமாக வளர்த்தெடுப்பதே ஆசிரியர்களின் உயர்ந்தபட்ச அக்கறையாகவுள்ளது.perfect personality தான் இன்றைய உலகத்தேவை.
மனித குலம் முகங்கொடுத்து வரும் பாரிய அச்சுறுத்தல் மிக்க சவால்களையும் அறைகூவல்களையும் வெற்றிகரமாகக் கடந்து செல்லும் உளப்பலமும் (Mental strength), உடற்பலமும் (Physical strength),ஆன்மிகப்பலமும் (Spiritual strength),ஒழுக்கப் பலமும் (Moral strength) மற்றும் அறிவுப்பலமும் (Knowledge strength) கொண்ட பரிபூரண ஆளுமைகளை வளர்த்தெடுப்பதே எமது கல்வி முறைமையின் அடிப்படையான இலக்கு. அதன் பிரதான மாற்ற முகவர்கள் ஆசிரியர்கள்தான் என்பதில் துளியும் ஐயமில்லை.அது இன்றைய உலகத்தேவை.காலத்தின் கட்டாயம். இல்லாதபோது அந்தக்கல்வியால் எந்த அனுகூலமும் விளையாது என்பதை அல்லாமா இக்பால் (றஹ்) அவர்கள் இவ்வாறு உணர்த்துகிறார் கள்.
இளைளர்களோ தாகித்துநிற்கும்போது
கிண்ணங்களோ காலியாக உள்ளன.
எந்த சமுக இளைஞர்களின் இதயங்கள்
இரும்பு போன்று பலமாக உள்ளதோ
அந்த சமூகத்திற்கு ஆயுதங்கள் வேறு
தேவையில்லை.
இத்தகைய மகத்தான இலக்கை அடைய வேண்டி உழைக்கும் ஆசிரியர்களிடம் அதற்கான தகுதியாகவும் நிபந்தனையாகவும் என்ன இருக்க வேண்டும்?
01.பரந்துபட்ட அறிவு
02.நேர்ப்பாங்கான மனோபாவம்
03.தேவையான திறன்கள்
04.அர்ப்பணம்
05.தொழில்வாண்மைசார் பக்குவம்
06.சிறந்த ஆளுமைப்பண்புகள்
இவற்றின் விரிவான விளக்கத்தை பின்னர் நோக்குவோம்.