தமிழகம் - திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்றுக்கொண்டிருந்தது.
ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மீது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.
இதில், ஒரு பெண்கள் உட்பட மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனே இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 3 பேரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 3 பேர் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் ரயில்வே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.