இன்று (17) அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தெனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வாத்துவ பொத்துபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பத்தில் மோதி, அருகில் இருந்த இரண்டு வீடுகளின் பாதுகாப்பு சுவர் மற்றும் கேட்டை முற்றாக சேதப்படுத்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்தின் நடத்துனர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தின் போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.