இறக்காமம் பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவைப் பணியகம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு.



அரச நிறுவனங்களினால் மக்களுக்காக ஆற்றப்படும் சேவைகள் துரிதமாகவும், எளிதாகவும், வினைத்திறனாகவும் உரிய சேவைகள் கிடைக்க அமையப்பெறுமாயின் அது பொதுமக்களுக்கு பாரிய நன்மை பயர்க்கக்கூடிய விடயமாகும். அத்தோடு பொதுமக்களுக்கான துரித சேவை அரச காரியாலயங்களில் இடம்பெற வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கமுமாகும்.



அந்தவகையில், இறக்காமப் பிரதேச செயலகத்திலும் பொதுமக்களுக்கு கிடைக்குப் பெறும் சேவைகளை மிக எளிதாகவும், துரிதமாகவும், நேரவிரயமின்றியும் பொதுமக்கள் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான பல்வேறுவகையான துரித வேலைத் திட்டங்கள் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.



அதன் முதற்கட்டமாக பொதுமக்கள் தங்களது சேவைகளை துரிதகதியிலும், வினைத்திறனாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில் “பொதுமக்கள் சேவைப் பணியகம் | Public Service Bureau (Front Office) மக்கள் பாவனைக்காக  2023.11.06 ஆம் திகதி | திங்கட்கிழமை பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.



இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், கணக்காளர் திருமதி. பாத்திமா றிம்ஷியா அர்ஷாட், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.முஹம்மட் தௌபீக், நிருவாக உத்தியோகத்தர்(GN) எச்.பி.என்.யசரத்ன பண்டார, சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.எல்.நௌபீர், மற்றும் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம்.மாஹீர்  உட்பட கிளைத் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.



மேலும், ஒரே கூரையின் கீழ் பல்வேறு வகையான பின்வரும் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்…


👉 #Shroff - கொடுப்பனவுகள் சார் வேலைகள் (உ+ம்:

பரீட்சை கட்டணங்கள் செலுத்துதல், 

Traffic fine செலுத்துதல் போன்ற இதர வேலைகள்….)


👉 #Birth_Death_Marriage_Certificates | பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்* தொடர்பான சேவைகள்


👉 #Revenue_Licence | வாகன அனுமதிப் பத்திரம் வழங்கல்


👉 #Vehicles_Ownership_Change | வாகன உரிமை மாற்றம


👉 #Income_Certificate | வருமானச் சான்றிதழ்,


👉 #Cattle_Transport_Permit | கால்நடைகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரம்

 

👉 #Mahapola_& Bursary |  மஹாபொல உதவித் தொகை.


போன்ற பல சேவைகளை பொதுமக்களாகிய நீங்கள் ஒரே கூரையின் கீழ், அலைச்சல் இல்லாமல் ”பொதுமக்கள் சேவைப் பணியகம் | Front office” ஊடாக பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



அந்தவகையில் நேற்றைய தினம் இப் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ், வாகன வருமானப் பத்திரம் போன்ற முதற் பிரதிகள் பதவிநிலை உத்தியோகத்தர்களால் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section