சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியாக குஷ் போதைப்பொருளு



 கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 25 ஆம் திகதி சுங்க வருமான கண்காணிப்பு குழுவினர் கொள்கலனை பறிமுதல் செய்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு 6 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கனடாவில் இருந்து கணேமுல்ல பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இந்த பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section