தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
09 மாவட்டங்கள்
இதன்படி, பதுளை, கொழும்பு, கேகாலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.