நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், இன்று படப்பிடிப்பு அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே அரங்கில் இருவரது படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
21 ஆண்டுகளுக்கு பின் ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல் - வைரலாகும் புகைப்படங்கள்
November 24, 2023
0
Tags