கலாநிதி.றவூப்ஸெய்ன்
"இது இஸ்ரேலில் அல்லது அமெரிக்காவில் ஏற்பட்டிருந்தால்"
காஸாவில் கொல்லப்பட்டோர் 14820.( 5500 குழந்தைகள் 4500 பெண்கள் உள்ளிட்டு).காயமடைந்தோர் 30000 பேர். காணாமல் போனோர் 7000 (குழந்தைகள் பெண்களே அதிகம்). காயப்பட்டோரில் அரைவாசிப்பேருக்கு மருத்துவம் இல்லாத கவலைக்கிடம். சுக்குநூறாக்கப்பட்ட இருப்பிடங்கள் 324000. கொல்லப்பட்ட மருத்துவர்கள் 300. ஊடகவியலாளர்கள் 65. தாக்கியழிக்கப்பட்ட மருத்துவமனைகள் 25. உணவகங்கள் ஆம்புலன்ஸ் வண்டிகள் பாமஸிகள். பள்ளிவாயல்கள் பல்கலைக்கழகங்கள் என ஒரு சமூகம் வாழ்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த கீழ்கட்டுமானத்தையும் ஸியோனஸம் நன்கு திட்டமிட்டு அழித்துள்ளது. இது ஏழு வாரங்களில் நடந்த மனித குலத்திற்கு எதிரான பாரதூரமான குற்றங்கள்.
மேற்குக் கரையில் கொல்லப்பபட்ட முஸ்லிம்கள் 250. காயப்பட்டோர் 800. கைதுசெய்யப்பட்டோர் 2800. இத்தனைக்கும் அவர்களுக்கும் இந்தப்போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்ரேல் 39 பேரை விடுவித்து 2800 பேரை கண்மூடித்தனமாக கைது செய்துள்ளது. எனது கேள்வி என்னவென்றால் இந்த நிலை இஸ்ரேலில் அல்லது அமெரிக்காவில் ஏற்பட்டிருந்தால் உலகம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள்
இவ்வளவும் நடந்து முடிந்தவை. இத்துடன் இவை நின்றுவிடுமா? இதை நிறுத்த ஏதேனும் உலகம் செய்யுமா? போர் நிறுத்தத்தின் முடிவில் எத்தனை அழிவுகள் காத்திருக்கின்றன? அறபு மன்னர்களே! கோழைகளே!! கொத்தடிமைகளே! உங்கள் சமூகத்தின் இரத்தம்தான் இந்த ஒட்டுமொத்த உலகிலும் மிகவும் மலிவானதா? ஒரு முஸ்லிமை யாரும் கொல்லலாம். இரத்தத்தை ஓட்டலாம் அகதிகளாக்கலாம். விரட்டியடிக்கலாம். கைது செய்யலாம். கடத்தலாம்.எட்டி உதைக்கலாம். கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கலாம். என்றா நீங்கள் இஸ்ரேலின் பக்கம் நிற்கிறீர்கள்?
இந்த உலகில் அதை யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள். இதுதான் எதிரிகளின் உற்சாகத்துக்கான மூல காரணம்.!!! நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைத்தலைவராக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்.
இருநூறு கோடி முஸ்லிம்கள் ! பாவம் இடையனில்லாத மந்தைக்கூட்டம். ஓநாய்களால் காவு கொள்ளப்படும் துயரம் நீள்கிறது எல்லையற்று.