ஆசிரியர்களின் பன்முக வகிபாகங்கள் 04.

0

 



கலாநிதி றவூப் ஸெய்ன்

 

மாணவர்களின் அடைவு மட்டத்தில் முக்கியமானது ஆசிரியர்கள் கொண்டுள்ள அறிவுத்தொகுதியாகும். மாணவர்களின் முழுமொத்த கவனத்தையும் ஈர்த்து கற்றலில் ஈடுபாடு கொள்ளச் செய்தல். வகுப்பறையை நேர்முகமாக முகாமை செய்தல், பாடசாலையின் நற்பெயரைக்கட்டியெழுப்பல் என அனைத்திலும் ஆசிரியர்கள் கொண்டுள்ள அறிவுக்கு பெரும் பங்குள்ளது. ஆசிரியர் தமது மாணவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பல் வினைத்திறன் மிக்க கற்பித்தலில் முதன்மையானது. அதற்கும் ஆசிரியரின் விரிவான அறிவு குறிப்பிட்டளவு பங்களிக்கிறது. 


எப்படிப்பட்ட கற்பித்தல் உத்திகளையும் நுட்பங்களையும் பிரயோகிக்கலாம் என்பதையும் ஆசிரியரின் அறிவுத்தொகுதியே  தீர்மானிக்கிறது.


ஆசிரியர்களின் அறிவுத்தொகுதியை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


01. பாடப்பரப்பு பற்றிய நிபுணத்துவ அறிவு (Knowledge on syllabus and text book)

02.கல்வித்தத்துவம் மற்றும் கல்வி விழுமியங்கள் குறித்த Educational philosophy and values) அறிவு

03. மாணவர் வாழும் சூழமைவு பற்றிய அறிவு(Educational sociology)

04. மாணவர்களின் உள நிலைமைகள் குறித்த அறிவு (Educational psychology)

05.கல்வித்தொழில்நுட்பம் பற்றிய அறிவு(Educational technology)

05 நடப்பு விவாகாரங்கள் குறித்த பொது அறிவு(General knowledge)


ஆசிரியர்கள் அறிவு வளமுள்ளவர்களாகவும் அறிவால் வலுவூட்டப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். அதன்முலமே மாணவர்கள் அறிவு வளம் பெறுவார்கள். ஆசிரியர் தேர்ந்த வாசகராகவும் இடையறாத தேடலுள்ளவராகவும் இருக்கும்போதே பரந்துபட்ட அறிவு கைகூடுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் தனது வீட்டில் ஒரு சிறுநூலகத்தையேனும் பராமரித்து வர வேண்டும். புத்தகங்களை கொள்வனவு செய்யும் உயர்ந்த பழக்கம் ஆசிரியருக்கு இருக்க வேண்டும். கற்பித்தலுக்காக கற்றல் (Learning for teaching ) அல்லது வாழ்நாள் நீடித்த கற்றல் (Lifelong learning) என்று இதனைத்தான் கல்வியியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.


முதலில் கல்வி விழுமியம் சார் அறிவு அல்லது நாம் வழங்கும் கல்வியின் தத்துவ அடிப்படைகள் பற்றிய அறிவு மிக முக்கியமானதாகும். அங்கிருந்தே எப்படிப்பட்ட மாணவர்களை தாம் வழங்கும் கல்விமுலம் உருவாக்க வேண்டும் என இந்த உலகம் எதிர்பார்க்கிறது என்பதை ஆசிரியர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த கல்விசார் விழுமியங்கள் Values of education எவை என்று மற்றொரு பதிவில் பார்ப்போம்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top