நடிகர் ரஜினி காந்த் மாலைதீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்துள்ளார்.
மாலைத்தீவில் இருந்து நேற்று இரவு 11.20 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்.-102 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு 'கோல்டன்' சிறப்பு விருந்தினர் அறை வழங்கப்பட்டிருந்ததுடன்,சிறிது நேரத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ரஜினி காந்த் மாலைத்தீவு செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்குள் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.