இறக்காமம் பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களை அமீர் அலிபுரம் சன சமூக நிலையத்தினால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (16) இறக்காமம் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
அமிர் அலிபுரம் சன சமூக நிலையத்தின் தலைவர் எஸ் எம் பாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இப்பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் மற்றும் கற்று வருபவோர் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தோர்களையும் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.கே.அப்துல் றஊப் மௌலவி, இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எச்.அப்துல் வஹாப், இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி யு.எல்.றுவைஸ், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
இதன்போது பாடசாலை மாணவ மணிகளின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.