(எஸ். சினீஸ் கான்)
சம்மாந்துறை 6ஆம் கொளனியில் அமைந்துள்ள மஸ்ஜிதுஸ் ஸாலிஹீனில் மீதமாக உள்ள கட்டிட பணிகளை மேற்கொள்ள தேவையாக இருந்த சீமெந்து பக்கட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நாபிர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இதன் அடிப்படையில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் கோரிக்கையினை ஏற்று தனது சொந்த நிதியின் மூலமாக சீமெந்து பக்கட்டுகள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியுதவிகளையும் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்கள் பள்ளி வாசல் நிர்வாகத்தினரிடம் அண்மையில் வழங்கி வைத்தார்.