ஸெய்ன்ஸித்தீக்
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான "சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக ககலாசார மற்றும் இலக்கியப்போட்டி நிகழ்ச்சி-2023" பிரதேச மட்ட போட்டிகளில் இறக்காமம் கல்வி கோட்டத்தில் காணப்படும் அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்கு கொண்டார்கள்.
இப் போட்டிகளில் பங்கு கொண்ட பல பாடசாலைகளில் இறக்காமம் கல்விக்கோட்டத்தில் காணப்படும் ஆரம்ப பிரிவு பாடசாலையான கமு/சது ரோயல் கனிஷ்ட் கல்லூரியின் மாணவர்கள் பல போட்டிகளில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தார்கள்.இவர்களுக்கான சான்றிதழ்கள் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தி ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டலாகவும் அமைவதற்கு காலை கூட்டத்தில் இவர்களுக்கான சான்றிதழ்கள் அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
இம்மாணவர்களைப் பயிற்றுவித்து அவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று வழிநடாத்திய ஆசிரியர்களுக்கும், கல்லூரியின் இணைப்பாட விதான செயற்பாட்டுக்கான குழுவினருக்கும் அதிபர் எம்.ஏ.எம்.பஜீர் அவர்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.