S.M.Z.சித்தீக்
கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ திரு செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 2023/07/19 ம் திகதி புதன்கிழமை இறக்காம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் N.M ஆசிக் அவர்கள் சந்தித்தார்.இச் சந்திப்பின் போது இறக்காமம், வரிப்பத்தான்சேனை மற்றும் குடுவில், வாங்காமம் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் காணப்படுகின்றன பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது, மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பேசப்பட்டது. இதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் அவசரமாக எங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும் பாடசாலைகள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்து தருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.இவ் சந்திப்பில் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இறக்காமம், வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பாக இறக்காம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் N.M ஆசிக் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இச் சந்திப்பில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் M.S உதுமாலெப்பை அவர்களும் இறக்காம பிரதேச சபையின் உறுப்பினர் கௌரவ M.L. முஸ்மி அவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள்.VC millan விளையாட்டு கழகத்தின் தலைவர் A.J.M. Sajath உட்பட கலந்து கொண்டார்கள்.
மேலும் இச் சந்திப்பினூடாக இன்ஷாஅல்லாஹ் எதிர் காலத்தில் இறக்காமம், வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் காணப்படுகின்ற கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.