நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.