S.M.Z.சித்தீக்
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் பல்வேறு பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்குமாக பல்வேறு கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்கும் கட்சித் தலைவர்களில் அரசாங்கத்தோடு இணைந்து பயணித்து வரும் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளும் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
•தேசிய சபையின் உறுப்பினர்
•பொதுக் கணக்குகள் குழு உறுப்பினர்
•சபைக் குழு உறுப்பினர் ( House Committee)
•பாராளுமன்ற நடவடிக்கை குழு உறுப்பினர்
•வலுசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வை குழு உறுப்பினர்
•நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு உறுப்பினர்
•பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான வழிவகைகளை கண்டறியும் உப குழுவின் உறுப்பினர்
•தேசிய கொள்கை வகுப்பதற்க்கான உப குழுவின் உறுப்பினர்
•அமைச்சுசார் ஆலோசனைக்குழு உறுப்பினர்.
• அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்