கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பாரியளவில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளது.
லிபரல் கட்சி அமைச்சரவையில் மாற்றம்கனேடிய லிபரல் கட்சியின் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி ஸ்காப்ரோ ராக் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்.