(சியாத் .எம். இஸ்மாயில்
பட உதவி. வி. மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை குழுவின் பதில் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபருமான எம்.ஏ.சீ.ஏ. ஐயூப் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் (07) நடைபெற்றது.
இந் நிகழ்வில் வைத்தியசாலையின் ஸ்தாபகரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் காலம் சென்ற வைத்தியசாலைக் குழுவின் தலைவர் டாக்டர் எம்.ஏ.றக்கிஸ்து நினைவு கூர்ந்து பிரார்த்தனை நடைபெற்றதுடன், வரவேற்புரையினை வைத்தியசாலைக் குழுவின் பதில் தலைவர் நிகழ்த்தியதுடன் வைத்தியசாலையின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் சமர்ப்பணம் செய்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் வைத்தியசாலையின் எதிர்கால, தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உரையாற்றியதுடன் நன்றியுரையினை வைத்தியசாலைக் குழுச் செயலாளரும் தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி யூ.எல். செய்னுடீன் நிகழ்த்தினார். இதன்போது வைத்திய அத்தியட்சகரினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.