நூருல் ஹுதா உமர்.
கல்முனை நகர் மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய தரமுயர்வு என்னுடைய வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 1C பாடசாலையாக (தரம் ஒன்று முதல் 13 வரை) தரமுயர்த்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பிரதித்தலைவரும்,
முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், இந்த பாடசாலையை தரமுயர்த்த வேண்டிய அவசியம் தொடர்பிலும், இப்பாடசாலையின் தேவை தொடர்பிலும் ஆழமாக கேட்டறிந்து இந்த பாடசாலையை தரமுயர்த்த துரித நடவடிக்கை எடுக்க உதவிய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இப்பாடசாலையை தரமுயர்த்த நடவடிக்கை எடுத்த கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டவலியு.ஜீ. திசாநாயக்க தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையிலான அதிகாரிகள், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தலைமையிலான அதிகாரிகள், பாடசாலை அதிபர், முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பாடசாலை தரமுயர்த்தப்பட்ட நோக்கம், இலக்கு என்பன இறைவனின் உதவியுடன் சிறப்பாகவும் முழுமையாகவும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.