1983 சூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தன. இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது,150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.
இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர், மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர். கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஜுலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதம் ஆனது. இவ்வருடமும் வடுக்களின் வலிகளாய் புலம்பெயர் தமிழர்களின் பேரணி ஐக்கிய ராட்சியத்திலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று 23.07.2023ஆம் திகதி ஆரம்பமாகி மிக நீண்ட நேரமாக இடம்பெற்றது.
தமிழ் பேசும் இனத்தின் குருதி குடிக்கும் கழுகுகளாய் செயற்பட்ட அக்காலத்தில் காணப்பட்ட தற்போது ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியே முடுக்கி விட்டது. எனும் விடயம் அழிக்க முடியாத வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நிகழ்ச்சிகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல முன்னணி பிரித்தானிய தமிழ் அமைப்புகள் இணைந்து இன்று 23 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பிற்பகல் இரண்டு மணி அளவில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது. ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்ந்து வரும் அதிகமான தமிழ் இளைஞர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
இது இலங்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி தமது இனம் அழிக்கப்பட்டமைக்கு எதிராகப் போராடும் மக்கள் சக்தியின்வெளிப்பாடாக அமைந்திருந்தது. இது தவிர இன்னும் ஒரு நிகழ்வையும் கண்காட்சியையும் நடத்த பல தமிழ் அமைப்புகள் கைகோர்த்து வருகின்றன.
இந்த நிகழ்வு ஜூலை 25, 2023 செவ்வாய்க்கிழமை லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளின் போது உயிர் இழந்தவர்களை நினைவு கூற அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.