இந்தியாவின், ஆந்திராவில் தனது கணவர் அடிக்கடி முத்தம் கொடுக்க வருகிறார் என்று குற்றம் சாட்டிய மனைவி ஒருவர் முத்தம் கொடுக்க வந்தபோது நாக்கை கடித்ததை அடுத்து அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது மனைவியை சமாதானப்படுத்த லிப்கிஸ் முத்தம் கொடுக்க கணவர் முயன்றதாக தெரிகிறது.
ஆனால் லிப்கிஸ் முத்தத்தை மனைவி விரும்பாத நிலையில் கணவர் வலுக்கட்டாயமாக கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வாறு லிப்கிஸ் கொடுக்க வந்த கணவனின் நாக்கை மனைவி கடித்ததால் படுகாயம் அடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வலுக்கட்டாயமாக கணவர் லிப்கிஸ் கொடுக்க முயன்றதால் நாக்கை கடித்ததாக மனைவி பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.