இறக்காமம் பிரதேசத்தினை சேர்ந்த ஒய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர்களை கௌறவிக்கும் நிகழ்வானது இன்று இடம்பெற்றது. இதன்போது தனது சேவைக்காலத்தில் இருந்து ஓய்வு பெற்ற 12 பொலீஸ் உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌறவிக்கப்பட்டதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 6 பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு உலர் உணவு பெதிகளும் வழங்கி கௌறவிக்கப்பட்டது.
இன் நிகழ்வானது பிரதான பொலீஸ் பரிசேதகர் M.M.சமீம் தலைமையில் இறக்காமம் சேகுமலை மூன்யாட் வளாகததில் இடம் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதீதியாக இறக்காமம் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் நசீல் அகமட் மற்றும் விசேட அதீதிகளாக இறக்காமம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரத்த உட்பட ஜும்மா பள்ளிவாயல் செயலாளர், இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ,இறக்காமம் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.