இன்று (06. 07. 2023) பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் மீனவர் இறங்குதுறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பித்திருந்தும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள அமுல்படுத்துமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் 2024 இல் இத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தார்.