இறக்காமம் அய்மன் கலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட சிகை அலங்கார தொழிலாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்க ஒன்று இன்று (2023.07.11) ஆம் திகதி இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.
இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி Dr.எம்.என்.எப்.றஸ்கா ஹாசிமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல,தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப்பாதுகாப்பு க்கான பெறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத்,இறக்காமம் அய்மன் கலை நிறுவனத்தின் தலைவர் தேச தனிய தேச கீர்த்தி எஸ்.எம்.சன்சீர், இறக்காமம் கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூதுலெவ்வை, இறக்காமம் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஜே. ஹாறூன், ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் தலைவர் எம்.எச்.வஹாப், பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.எம்.இல்யாஸ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கருத்துரைத்த சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் இத்தொழில் தொடர்பான சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் ஒழுங்குகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை வழங்கினார் மேலும் வெள்ளிக்கிழமைகளில் சிகை அலங்கார நிலையங்களை கிரமமாக மூடுவதற்கும் விலைப்பட்டியல்கள் முறையாகத்தொங்க விடப்பட வேண்டும் என்றும் சுட்டி காட்டி உள்ளார்.