அபு அலா –
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர்களுக்கிடையில் நேற்று (24) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதற்கமைவாக, கிழக்கு மாகாணத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.