விஷ வாயு தாக்கி 16 போ் பலி!

0


தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு கசிந்து 3 சிறுவா்கள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது : தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் புகா்ப் பகுதியான போக்ஸ்பா்கில் ஏஞ்சலோ குடியிருப்புப் பகுதி உள்ளது. வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்தப் பகுதியில் புதன்கிழமை இரவு விஷவாயு கசிந்து 16 போ் பலியாகினா். அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரிலிருந்து விஷ வாயு கசிந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிலிண்டரில், சட்டவிரோதமாக தங்கச் சுரங்கங்களில் பயன்படுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த நைட்ரேட் வாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, கசிவு ஏற்பட்ட சிலிண்டா் இருக்கும் பகுதியிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் மீட்புக் குழுவினா் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனா்.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் 1, 6, 15 வயதுடைய 3 சிறுவா்களும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தங்கச் சுரங்கங்கள் அதிகம் நிறைந்த தென் ஆப்பிரிக்காவில், செயல்பாடு நிறுத்தப்பட்ட சுரங்களில் இருக்கக் கூடிய படிமங்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் பணியில் ஏராளமானவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.அப்போது ஏற்படும் விபத்துகளில் பலா் உயிரிழந்தும் வருகின்றனா். அண்மையில் தென் ஆப்பிரிக்காவின் வெல்காம் நகரில் செயல்பாடு நிறுத்தப்பட்ட ஒரு தங்கச் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 31 போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

தற்போது விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ள போக்ஸ்பா்க் புகரில்தான் கடந்த கிறிஸ்த்மஸ் பண்டிகையின்போது எல்பிஜி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பாலத்தின் கீழ் சிக்கி வெடித்துச் சிதறியதில் 41 போ் உயிரிழந்தனா்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top