ஏ.பி.எம்.அஸ்ஹர்
உற்பத்திறன் போட்டி தொடர்பாக நிறுவனஙகளை விழிப்பூட்டும் நிகழ்வொன்று இன்று புதன் கிழமை சாய்ந்தமருதில் இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்களான ஏ.எல்.அஜ்வத் எம்.எச்.கே.சனூஸ் மற்றும் கல்முனை பிராந்திய பணிப்பாளர் பணிமனைளின் தரமுகாமைத்துவ வைத்திய அதிகாரி டி.பீ.ஜி.டானியல் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.புஹாது உட்பட. சாய்ந்தமருது பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆர்.ஜெஸீலா எம்.ஏ.ஷிபா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் அம்பாரை பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.விஜயகுமார் வளவாளராகக்கலந்து கொண்டார்.