கடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்.

Dsa
0

 


பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகிறது.


கிரேசி, லேரியா, அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து ‘அகார் அகார்’ என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக் கட்டி  முதலியவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி, மீன் முதலியவற்றை டின்களில் அடைத்துப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.


ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு நோயாளிகட்குத் தேவையான சக்தியை அளிப்பதாகவும், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

 

கிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கும் மருந்தாகின்றன. துர்வில்லியா என்னும்  கடல்பாசி தோல் நோயை குணப்படுத்துகிறது. பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து  இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ‘அகார் அகார்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி  சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்


சிலவகைப் பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த  நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

 

இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட  மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்.

 

சிலவகை கடல் பாசிகள் மருத்துவ பயன்கள் உடையது. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். இதில் வைட்டமின்,  மினரல் மற்றும் புரோடீன் நிறைந்து இருக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top