2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக முன்னிலையாகுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இரத்
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. நீதியரசர் மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணம் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் எவையும் இதுவரை இல்லை எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மனுதாரரை சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டதுடன், நீதவான் வழங்கிய அழைப்பாணையை செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், மனுதாரரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.